இந்தியாவில் மேற்குவங்க மாநிலத்தில் வேறு சாதி வாலிபரை காதலித்த இளம் பெண்ணை 12 பேர் சேர்ந்து கற்பழித்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மாவட்டத்தில் சபல்பூல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபரை காதலித்தார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கு கிராம தலைவர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார்.
அபராத தொகையை செலுத்த வசதி இல்லை என்று அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணை யார் வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தலைவர் கூறினார்.
அதை தொடர்ந்து தீர்ப்பு சொன்ன கிராம தலைவர் உள்பட பல முதியவர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கற்பழித்தனர். அவர் கதறி அழுத போதும் விடவில்லை. ஊர் பஞ்சாயத்தார் உள்பட 12 பேர் சேர்ந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார்கள்.
மயங்கிய நிலையில் கிடந்த அந்த பெண் அருகில் உள்ள சுரிசதார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்னை கிராம தலைவர் உள்ளிட்ட பஞ்சாயத்தார் கற்பழித்தது குறித்து சபல்பூல் பொலிசில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் சம்பவம் நடத்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய கிராம தலைவர் உள்பட மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
தற்போது இரண்டு நாள் சிகிச்சை முடிந்த நிலையில் இதுகுறிதது அப்பெண் கூறுகையில், தான் ஒருவரைக் காதலித்ததாகவும் அதன் காரணமாக, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், தனக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அபராதத் தொகையைத் தன்னால் செலுத்த முடியாதென மறுத்ததால் தன்னை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர், அப்பெண் கடின வேலைகளில் ஈடுபடும் ஒரு பழங்குடியினப் பெண் என்ற காரணத்தினாலேயே இவ்வாறான கொடூர சம்பவத்தின் பின்னரும் உயிர் தப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
girl Rape in Westbengal,Girl Raped due to Intercaste love in Westbengal,13boys Raped Westbengal Girl,
