Home » » Healthy Food List:Butter | சத்துப் பட்டியல்:வெண்ணெய்

Healthy Food List:Butter | சத்துப் பட்டியல்:வெண்ணெய்

Written By Thamizhan on 26 January 2014 | 1:38:00 am


உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்களில் வெண்ணெயும் ஒன்று. பாலில் அடங்கி உள்ள அநேக ஊட்டச்சத்துகள் வெண்ணெயிலும் காணப்படுகிறது. அவற்றை இங்கே பட்டியலிடுவோம்...

* பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் மாடுகளின் பாலில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. 

இளம் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் வெண்ணெய், உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கிரீஸ் மக்கள் அதிக அளவில் வெண்ணெயை பயன்படுத்துகிறார்கள். வீடுகளில் உணவுப் பொருட்களுடன் சேர்த்தும், எண்ணெய் போல வறுத்து எடுக்கவும் வெண்ணெயை பயன்படுத்துகின்றனர்.

* வெண்ணெயில் வைட்டமின்-ஏ சத்துக்கள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. இது தைராயிடு மற்றும் சிறு நீரக நோய்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாகும்.

* லாரிக், லிசிதீன் போன்ற அமிலங்கள் வெண்ணெயில் நிறைந்துள்ளன. இவை உடலில் கொழுப்புகளை சேரவிடாமல் விரைவில் செரிக்கச் செய்கின்றன. மேலும் உடலை பூஞ்சை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

* உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் பல்வேறு ஆன்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை உடலில் ஏற்படும் நோய் காரணிகளை போக்கி உடலை காக்கின்றன.

* வெண்ணெயில் 'வைட்டமின்-ஈ' மற்றும் 'வைட்ட மின்-கே' குறிப்பிட்ட அளவில் காணப்படுகின்றன. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. நோய் எதிர்ப்பாற்றலை வழங்கக்கூடியவை.

* எளிதில் செரிமானமாகும் கொழுப்புச் சத்துகள் வெண்ணெயில் நிரம்பி உள்ளன. இவை உடலுக்கு சக்தி அளிப்பதுடன் உடலை புற்றுநோய் மற்றும் திசு சிதைவுகள் ஏற்படாமல் காக்கவல்லது.

பயன்பாடுகள்:

* கொழுப்பு அமிலமான லினோலிக் அமிலம் அதிகளவில் காணப்படுகின்றன. தசைகள் வளர்ச்சி பெறவும், செரிமான சக்திகளை அதிகரிக்கவும் இது உதவும். புற்றுநோய் எதிர்ப்பு சக்தியும் வழங்கும்.

* பற்களை வலுப்படுத்தும் 'வைட்டமின்-டி' மற்றும் கால்சியம் சத்துகள் வெண்ணெயில் நிறைந்துள்ளன. பல் சிதைவுகளை தடுக்க வல்லது வைட்டமின்-டி.

* குழந்தைகளின் உணவுப் பொருட்களுடன் வெண்ணெய் சேர்த்துக் கொள்வதால், அவர்களின் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்குகிறது. அதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் மூளையை தொடர்பான பல நோய்களை தடுக்கின்றன. வெண்ணெய் வயிறு உபாதைகளையும் சரிப்படுத்தும்.
Powered by Blogger.